திங்கள், 14 மார்ச், 2011

உங்கள் வயதினைக் கொண்டு உங்களைத் தீர்மானியுங்கள் !!!!!

  • ஒரு மனிதன் பத்து வயதிற்கு முன் பாலகன்.அதற்கு மாறாக பத்து வயதிற்கு மேற்பட்டால் அவன்  "பயல்"எனும் நிலைக்கு மாறுகின்றான்.சிறுவனாக  இதே வயதில் கல்வியின் பால் தத்தமது கவனத்தையும் செலுத்துகின்றான்.
  • இருபது வயதில் ஒரு மனிதன் "இளம்மட்டம்"ஆகி விடுகின்றான்.இளைஞராக இவ் வயதில் தைரியமும் பலவித பக்தியும்  ஏற்படுகிறது.
  • முப்பது வயதில் ஒரு "மூர்க்கம்" அடை கின்றான்.இவ்வயதில் தான் நினைத்தபடி வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வாழ்கின்றான்.
  • நாற்பது வயதில் ஒரு மனிதன் "நரையை"அடைகின்றான். அவனது முடியே  சாட்சியாக அமைகின்றது.
  • ஐம்பது வயதில் ஒரு மனிதன் "அறிவு"டையவனாக மாறுகின்றான்.இவ் வயதில் சகலவிதமான அறிவுகளும் ஒரு மனிதனுக்கு ஏற்படுகின்றது.
  • அறுவது வயதில் ஒரு மனிதன் "சொறிச்சலுக்கு"மாறுகின்றான்.இவ்வயதில் நோய்கள் கூட தாராளமாக ஒரு மனிதனுக்கு ஏற்படுகின்றது.
  • எழுபது வயதில் ஒரு மனிதன் "ஏக்கம்"அடைகின்றான்.இவ்வயதில் பல விதமான சிந்தனைகளும் தாக்களும் ஏற்படுகின்றது.
  • என்பது வயதில் ஒரு மனிதன் "மயக்கம்"அடைகின்றான்.அவனுக்கு இவ் வயதில் எதுவுமே திடீரென செய்ய முடியாமல் போய்விடுகின்றது.
  • தொண்ணூறு வயதில் ஒரு மனிதன் "தூக்கம்" அடைகின்றான்.அவனுக்கு இவ்வயதில் உறக்கமே தோன்றும்.தள்ளாடும் நிலைமைக்கும் மாறுபடுகின்றான்.
  • நூறு வயதில் ஒரு மனிதன் "இழுத்துகவுலு" எனும் நிலைக்கு மரணத்திற்கு மாறி விடுகின்றான்.இவ்வாறு ஒரு மனிதனின் வாழ்க்கையில் வயதில் சில மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே செல்கின்றன. மாறாக சிலரது வாழ்வில் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே செல்கின்றன.மாறாக சிலரது வாழ்வில் மாற்றங்கள் ஏற்படும் முன்னே சில மனிதர்களது வாழ்வில் மரணங்களும் ஏற்படுகின்றன.இவ்வுலகில் எந்த மனிதனும் நிலையாக தொடர்ந்து உயிருடன் வாழ முடியாது.என்றோ ஓர் நாள் இவ்வாறான மாற்றங்களுடன் மரணத்தையும் அனுபவிக்கவே மனிதன் இவ்வுலகில் பிறந்து இருக்கின்றான்.இதில் இருந்து மனிதர்களது வாழ்க்கையில் பலவித மாற்றங்கள் ஏற்படவே செய்கின்றன....

ஞாயிறு, 13 மார்ச், 2011

தடாகம் கலை இலக்கிய சஞ்சிகையில் முன் அட்டையில் கௌரவிக்கப் பட்டவர்கள்..

  • திரு.டொமினிக் ஜீவா(மல்லிகை ஆசிரியர்)
  • கலாபூஷணம்.பீ.எம்.புன்னியாமீன் (பண் நூல் ஆசிரியர்)
  • கலாபூஷணம் ஏ.யூ.எம்.ஏ.கரீம்
  • சீ.எல்.பிரேமினி
  • கல்ஹின்னை கவியரசு.ஹலீமுதீன்

தடாகம் கலை இலக்கிய வட்டத்தினால் "கலை தீபம்"பட்டம் பெற்றுக் கொண்டவர்கள் !!

  • பேராசிரியர்.சோ.சந்திரசேகரன்.  (கொழும்பு  பல்கலைக்  கழகம்)
  • திருமதி.நூறுல் ஐன் நஜ்முல் ஹுசைன்.(கொழும்பு மாவட்ட தகவல் அதிகாரி-பிரபல எழுத்தாளர்)
  • நட்பட்டிமுணை பளில் (பிரதேச செயலாளர்-பிரபல எழுத்தாளர்)
  • கவிச்சுடர் அன்பு முகைதீன்(பிரபல எழுத்தாளர்)
  • கலாபூஷணம்  பீ.எம் புண்ணியாமீன் (பிரபல எழுத்தாளர்-பண் நூல் ஆசிரியர்)
  • கவிஞர் எழுவில் அமீர்(பிரபல எழுத்தாளர் பாணத்துறை )
  • கலையமுதன் ஏ.சீ.எம் இக்பால்(குருநாகல்)
  • திரு. ஜே.கிருஷ்ணா(பிரபல அறிவிப்பாளர்-இலங்கை வானொலி)
  • ஜனாப்.எஸ்.நஜிமுதீன்-சாய்ந்தமருது( பிரபல  எழுத்தாளர்-  கவிஞர்-வைத்திய நிபுணர்)
  • திரு.அருள் சத்திய நாதன்(தினகரன் ஆசிரியர் பீடம்)
  •  கலாபூஷணம்.ஏ.யூ.எம்.ஏ.கரீம்(சாய்ந்தமருது-பிரபல கவிஞர்-எழுத்தாளர்)
  • பேராசிரியர்.சு.வித்தியானந்தன்.(யாழ்ப்பாணம்)
  • ஈழக் குயில் இத்ரீஸ்(மருதமுனை)
  • டாக்டர்.எம்.எல்.எம்.தஸ்லீம்(பக்மீகொல்ல-பிரபல கலைஞர்)
  • வைத்திய நிபுணர்.அல்ஹாஜ்.பீ.எம்.ஸாலீன்(சிலாபம்)
  • ஏ.அலாவுதீன் (ஒலுவில் அமுதன்-பிரபல கவிஞர்-எழுத்தாளர்)
  • வைத்தியக் கலாநிதி-ஜின்னாஹ்  சரிபுதீன்(கொழும்பு-பிரபல எழுத்தாளர்-கவிஞர்)
  • மௌலவி.எம்.எச்.எம்.சம்சுதீன்(பிரபல எழுத்தாளர்)
  • இப்னு அஸுமத் (கொழும்பு-பிரபல தமிழ்,சிங்கள இரு மொழிக் கவிஞர் -எழுத்தாளர்)
  • உடப்பூர் வீர சொக்கன்(உடப்பு-பிரபல எழுத்தாளர்-கவிஞர்)
  • திருமதி.சுகைதா.ஏ.கரீம் (கொழும்பு-  பிரபல  எழுத்தாளர்-கவிஞர்)
  • அல்-ஹாஜ்.பதியத்தலாவை  பாறூக்( காத்தான்குடி-பிரபல எழுத்தாளர்-கவிஞர்)
  • கலாநிதி கெ.எம்.காளிதீன்
  • பாவலர்.பசில்.காரியப்பர்.
  • திருமதி.ராஜேஸ்வரி சண்முகம்(மொரட்டுவ-மூத்த அறிவிப்பாளர்-இலங்கை வானொலி)
  • திருமதி.ஹலீமா இம்தியாஸ்(கும்பலங்க-தமிழ் சிறப்பு பட்டதாரி(M.A)-பிரபல எழுத்தாளர்)
  • அல்-ஹாஜ்.ஏ.சீ.எம். றியாழ் .(பொல்கஹவெல-கல்விமான்-பிரபல  சமூக  சேவகர்)
  • உஸ்மான் சாகிப்(பிரபல எழுத்தாளர்)
  • திரு.பெரியசாமி சீதா ராமன் (கொழும்பு-பிரபல அறிவிப்பாளர் இலங்கை வானொலி-தொலைக்காட்சி)
  • திருமதி.தாரிக்கா  மர்சூக்.  (குருநாகல்-பிரபல எழுத்தாளர்-கவிஞர்)
  • அல்-ஹாஜ்.பஷீர்  அப்துல் கையூம்(மருதமுனை-பிரபல அறிவிப்பாளர் இலங்கை வானொலி-தொலைக்காட்சி) 
  • அ.லெ.மு. ராஸிக்(பொல்கஹவெல-பிரபல எழுத்தாளர்)
  • ஜனாப்.ஏ .தாஜ்(அக்கரைப்பற்று-பிரபல அறிவிப்பாளர் இலங்கை வானொலி-தொலைக்காட்சி)
  • திருமதி.நாகபூஷணி கருப்பையா (கொழும்பு- பிரபல கவிஞர் அறிவிப்பாளர் இலங்கை வானொலி-தொலைக்காட்சி) 
  • திரு.முத்தையா ஜெகமோகன் (கொழும்பு-மின்னல் அறிவிப்பாளர் இலங்கை வானொலி)
  • பசீர் சாய்ந்தமருது( பிரபல எழுத்தாளர் -முன்னாள் மஹ்முத் மகளிர் கல்லூரி அதிபர்)
  • ஜனாப்.ஐ.எல்.ஏ.மஜீத்(சாய்ந்தமருது-அதிபர்/ மஹ்முத் மகளிர் கல்லூரி )
  • கவிஞர் .குறிஞ்சி தென்னவன்.
  • நெல்லை, க.பேரன்.  
  • சீ.எல்.பிரேமினி(யாழ்ப்பாணம்)