சனி, 24 டிசம்பர், 2011

தாமரை 06

  பெயர்: யாழ் அஸீம்


யாழ்ப்பாணம் உடுவில் பிரதேசத்தில் 1952 .09 .15 ஆம் திகதி யாழ் அஸீம் பிறந்தார்.இவர் பல்துறை ஆளுமை மிக்க கலைஞர்.இவரது தந்தை அப்துல் காதர் அவர்களும் ஒரு எழுத்தாளர்.நிறைய எழுதி இருக்கிறார்.ஆனால் அதை வெளிக் கொண்டு வருவதற்கான சந்தர்ப்பமும் வாய்ப்பும் அப்போது இருக்கவில்லை.நிறையப் புத்தகங்கள் வாங்கி தனது பிள்ளைகளை வாசிக்கத் தூண்டுவார்.தன் மகனை எப்படியேனும் ஒரு வைத்தியராக்க வேண்டும் என்றே அவர் ஆசை கொண்டிருந்தார்.அஸீம் GCE O /L  எழுதி விட்டு பெறுபேரை எதிர்பார்த்திருந்த வேலை மாரடைப்பின் காரணமாக அவர் வைத்தியசாலையில் சேர்த்த போது காலமாகி விட்டார் .கடைசித் தருவாயில் கூட தன் மகனின் கைகளைப் பற்றிக் கொண்டு நீ வைத்தியராக வேண்டுமென்று கூறினார்.இன்று நினைத்தாலும் அது அஸீமிற்கு கண்ணீர் தரக் கூடிய நினைவுதான். க.பொ.த. (உயர் தரம்) படித்துக் கொண்டிருந்த காலப் பகுதியில் எழுதத் தொடங்கி விட்டாலும் 1990 அக்டோபரில் வட மாகாணத்தில்  முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட பிறந்த மண்ணின் இழப்பும் அகதி வாழ்க்கையின் வலிகளும்,அவலங்களும் இவரை வேகமாக எழுத வைத்தன.

வாடா மாகாண முஸ்லிம்கள் புலிகள் வெளியேற்றப்பட்டமையானது ஒரு பலவந்த வெளியேற்றமாக மட்டுமே பேசப்பட்டது.இதில்  முஸ்லிம்களது சகல சொத்துக்களும் கொள்ளையிடப்பட்டன.இந்த கொள்ளைச் சம்பவமானது இலங்கை வரலாற்றில் இடம் பெற்ற பாரிய கொள்ளைச் சம்பவமாகும்.அது வரலாற்றில் போதுமானளவு உள் வாங்கப்படவில்லை. இலங்கையின் பிற மாகாணங்களில் வாழும் முஸ்லிம்கள் யாழ்ப்பணத்தில் வாழ்ந்தனரா என்று ஆச்சிரியத்துடன் வினவியிருக்கிறார்கள்.எனவே தன் மீது நிகழ்த்தப்பட்ட இன அழிப்புக்குச் சமனான நிகழ்வை பதிவு செய்வது வரலாற்றுத் தேவை என உணர்ந்தார்.இன அழிப்பிற்கு எதிரான (Genocide ) எதிரான ஐ.நா. சாசனத்தின் படி சேர்ந்த வாழ்விடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்படுவதும் பண்பாட்டு வாழ்வியலின் தனித்துவ அடையாளங்களை அழித்தலும் இன அழிப்பிற்குச் சமனான குற்றங்களாகும். இவை இரண்டுமே வட  மாகாண  முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டன."எந்த ஒரு சமூகம் தனது சொந்த வரலாற்றை அறிந்திருக்க வில்லையோ அந்த சமூகம் அழிந்து விடும்"  என்ற அல்லா மா இக்பாலின் கூற்றுப் படி எமது வரலாற்றை ஆதாரப்பூர்வமாக எதிர் வரும் சந்ததிகளுக்கு உரிய முறையில் நடத்தி வைக்க வேண்டியது நமது தார்மீக  கடமையாகும் என்ற உணர்வே இன்னும் அவர் பேனாவை இயக்க வைத்துக் கொண்டிருக்கின்றது.

எழுத்துக்கள் சமூக மாற்றத்திற்குப் பயப்பட வேண்டும்.அப்படி இல்லாத எழுத்துக்கள்  வேறும் பதர்கள் தான். புதிய தலைமுறைக்குச் சொல்வதும்  இதனைத்தான். இலக்கியம் என்றால் அதற்கு இலக்கு இருக்க வேண்டும்.அப்போது தான் அது காலத்தை,சமூகத்தை செழுமையாக்கும்.எமது படைப்புக்கள் சமூக மாற்றத்திற்குப் பங்காற்ற வேண்டும்.அதற்காகத் தான் எழுத வேண்டும் என்று கூறுவார். சமூகத்தில் ஓர் அங்கமாக இருக்கின்றார் யாழ் அஸீம்.உடம்பில் எங்காவது வலி வந்தால் உடம்பு முழுவதுமாகத் தான் வலிக்கிறது.அது போலத்தான் சமூகத்திற்கு ஏதும் வரும் போது அது என்னையும் காயப்படுத்துகிறது.ஒவ்வொரு மனிதனும் சமூகத்தின் அங்கமாக இருக்க வேண்டும்.தான் சார்ந்திருக்கின்ற சமூகத்தின் முன்னேற்றத்திலும் அபிவிருத்தியிலும் அக்கரை இல்லாவிட்டாலும் அவன் தூய்மையில்லாத இலக்கியவாதியுமல்ல,மனிதனுமல்ல.அந்த வகையில் முடியுமான சமூகப் பணிகளில் தன்னையும் இணைத்துப் பணியாற்றி வருகின்றார்.போரின் வலிகளை,அதன் அவலங்களை நேரடியாக அனுபவித்தவர் உறவினர்கள்,நண்பர்கள்,அயலவர்கள் என பல உயிர்களை பறித்துசக் சென்று விட்ட  இந்தப் போர் மிகக்  கொடியது. ஒரு நாள் இரவு அஸீம் உறங்கிக் கொண்டிருந்த வேளை  ஹெலி கெப்டரில் இருந்து சுடப்பட்ட துப்பாக்கி ரவைகள் இவரது வீட்டுக் கூரையையும் துளைத்துக் கொண்டு சுவரில் பட்டுத் தெறித்தது மயிரிழையில் உயிர் தப்பினார்.

1990 அக்டோபர் முஸ்லிம்களை வெளியேற்ற சில வாரங்களுக்கு முன் போர் உக்கிரமடைந்த வேளை விமானக் குண்டு வீச்சில் இருந்தும் ஷெல் தாக்குதல்களில் இருந்தும் தப்புவதற்காக புதுப் பள்ளி வாசலுக்கு அண்மையிலுள்ள மாடி வீட்டில் பலர் கூடியிருந்தனர்.அப்போது வானில் வட்டமிடப்பட்ட விமானத்தை நோக்கி புலிகள் பள்ளிவாசலுக்கு அருகில் இருந்து தாக்கினர்.பதிலுக்கு விமானத்தில் இருந்து போடப்பட்ட குண்டு அந்த மாடி வீட்டின் மீது விழுந்து வெடித்ததில் குழந்தைகள்,பெண்கள் உட்பட 10 பேர் அவ்விடத்திலேயே பலியாகினார்கள்.வார்த்தைகளால் கூற முடியாத அவலங்கள் அவை.அது மட்டுமன்றி அஸீம் தங்கையின் கனவை ஜலீல் புலிகளின் துப்பாக்கி சூட்டுக்கு பலி கொடுத்துள்ளார்.உரிமைக்கான போராட்டங்கள் தவிர்க்கப்பட முடியாதவை.ஆனால் அந்தப் போராட்டங்களின் தூய வடிவம் கெட்டு விடும் போது அது அழிவுக்கே இட்டுச் செல்லும் என்பதற்கு விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி ஒரு வரலாற்று சான்றாகும்.சிறு பாண்மை உரிமைக்காக போராடுவதாக கூறிக் கொண்டு இன்னொரு சிறுபாண்மையான  முஸ்லிம்களை வடமாகணத்தில் இருந்து இனச்சுத்திகரிப்பு செய்தது மட்டுமன்றி அவர்களின் அசையும் அசையா சொத்துக்களையும் கொள்ளையடித்து கிழக்கில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை படுகொலை செய்தமை அவர்களது போராட்டத்தை களங்கப்படுத்தி விட்டது.இத்தகைய பாதிப்புக்களை எழுத்தில் எழுதுகின்றார்.

ஒய்வு பெற்ற ஒரு விஞ்ஞான ஆசிரியரான இவர் சிறந்த ஊடகவியலாளரும் ஆவார்.1998 ஆம் ஆண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட விமர்சன விருது விழாவில் தமிழ்ச் சேவையில் முதலாம் இடத்திற்கான விருதை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரத்தூங்காவிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.தமிழ் முஸ்லிம் இன உறவைக் கட்டியெழுப்பும் வகையில் இவரால் படைக்கப் பட்ட பல கட்டுரைகள் மற்றும் கவிதைக்காக 2007 ஆம் ஆண்டு இன உறவுகளையும்,தேசத்தையும் கட்டியெழுப்புவதற்கான கேத்திர நிலையம் இவரை கௌரவித்தது.2008 ஆம் ஆண்டு தமிழ் கலைஞர் வட்டத்தின் (தகவம்)சிறுகதைப் படைப்பிற்கான முதலாவது பரிசைப் பெற்றுள்ளார்.சமூகவியல்,புனைக்கதை,சிறுவர் இலக்கியம்,ஆத்மீகம்,விஞ்ஞானம் போன்ற துறைகளில் ஆக்கங்கள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இவரது பல் துறைச் சேவையைப் பாராட்டி கலாபூஷணம்,வடப் புலச்சான்றோர்,சாமஸ்ரீ,தேச கீர்த்தி,அகஸ்த்தியர் போன்ற பல விருதுகளையும் பெற்றுள்ளார்.30 வருட ஊடகவியல் சேவையைப் பாராட்டி வட மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் 2011 ஆம் ஆண்டுக்கான கௌரவ ஆளுநர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.இவரைத் தொடர்பு கொள்ள வேண்டுமாயின்,



தொடர்புகளுக்கு : யாழ் அஸீம்,
                                     228 /1 ஜும்மா மஸ்ஜீத் வீதி,
                                     மாளிகாவத்தை,
                                     கொழும்பு - 10

தொலைபேசி : 071 - 2268466



இவரின் பணி தொடர இதயத்தால் வாழ்த்துகிறேன்.

ஞாயிறு, 11 டிசம்பர், 2011

தாமரை (05)

 

கிழக்கிலங்கையின் நிந்தவூர் மண் தமிழுக்கு வளம் பல சேர்த்த எழுத்தாளர்கள் ,அறிஞர்களை தந்துள்ளது
அந்த வரிசையில் ஒருவர் தான் இந்த இளைஞர் நிந்தவூர் ஷிப்லி....
பெயர் - நிந்தவூர் ஷிப்லி
விலாசம் :- இல 50 ஹாஜியார் வீதி, நிந்தவூர்-18
படித்தது- பி.பி. (தகவல் தொழிநுட்ப விசேட துறை,தென்கிழக்குப்பல்கலைக்கழகம்),எம்.எஸ் சி (தகவல் முகாமைத்துவம், களனிப்பல்கலைக்கழகம்).
 
பிறந்த திகதி-1985-01-31

இதுவரை நான்குகவிதை நூல்களையும் ஒரு ஆங்கில நூலையும்
எழுதி வெளியிட்டு உள்ளார்
2002ம் ஆண்டு சொட்டும் மலர்கள் என்ற நூலும் ,2006ம் ஆண்டு
விடியலின் விலாசம் என்ற நூலும் ,2008ம் ஆண்டு நிழல் தேடும் கால்கள் என்ற நூலும் ,2009ம் ஆண்டு "தற்கொலைக்குறிப்பு" என்ற நூலும் அதே ஆண்டில் "தகவல்' முகாமைத்துவம்" எனகஜற ஆங்கில நூலும் 
வெளியிட்டு உள்ளார்.. கவிதை தவிர ஆய்வு முயற்சிகளிலும்
நிறைய ஈடுபட்டு உள்ளார்."தேசிய ஒருமைப்பாட்டை இலங்கையில் நிலைநிறுத்துவதன் அவசியம் என்ற ஆய்வு இலங்கை சமாதான செயலகத்தினால் சிறந்த ஆய்வாக 2005 இல் தெரிவானது.
அத்தோடு "இணையமும் தமிழும்"இலங்கையின் இணையப்பாவனை" போன்ற ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார். பல்கலைக்கழக தமிழ்ச்சங்கத்தில் உறுப்பினராக இதழாசிரியராக மற்றும் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.. நிஷ்டை என்ற சஞ்சிகையின் ஆசிரியராகவும்
பணியாற்றியுள்ளார்..தவிர மாற்றுக்கருத்துக்கான சினிமா அமைப்பின் நிகழ்ச்சி
ஒருங்கிணைப்பாளராகவும் முஸ்லிம் மஜ்லிஸின் செயலாளராகவும் பணிபுரிந்திருக்கிறார்..மேலும் நிந்தவூர் இளம்பட்டதாரிகள் சங்க செயலாளராகவும் சிறிது காலம் தலைவராகவும் பணிபுரிந்ததோடு கிழக்கு மாகாண பசுமை அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினராகவும் கடமை
புரிந்துள்ளார்..

பத்திரிகைகளை பொறுத்தவரை இலங்கையின் தினகரன் வாரமஞ்சரியின்
கவிதைப்பூங்காவில் இதுவரை 200 இற்கும் மேற்பட்ட கவிதைகள் பிரசுரமாகியுள்ளன. இன்னும் வீரகேசரி,சுடர் ஒளி,தினமுரசு, நவமணி போன்ற பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி
வருவதோடு மல்லிகை,படிகள்,நிஷ்டை, பெருவெளி போன்ற சஞ்சிகைகளிலும்
பங்களிப்புச்செய்கிறார்..,இணையத்தளத்தை பொறுத்த வரை கீற்று, வார்ப்பு, தமிழ்மன்றம், தமிழ்
ரைற்றர்ஸ், திண்ணை போன்றவற்றிலும் நிறைய எழுதுகிறார்..

தென்னிந்திய தமிழ் ஆல்பங்களில்
பாடல்களும் எழுதியுள்ளார்.. இலக்கியப்பணிகளுக்காக தினகரன் வாரமஞ்சரியாலும் இலங்கை
நேத்ரா தொலைக்காட்சிக்காகவும் பேட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்..முதலாவது தொகுப்புக்காக
கவியரசர் வைரமுத்துவினால் நேரடியாக பாராட்டுப்பெற்றதோடு மக்கள் அரங்கம் புகழ்
விசுவினாலும் பாராட்டப்பட்டுள்ளார்..தமிழ் மன்றம் இணையத்தளம் நடாத்திய கவிதைப்போட்டிகளில்
இரண்டு முறை தங்கப்பதக்கமும் ஒரு முறை வெள்ளிப்பதக்கமும் பெற்றுள்ளார்..அத்தோடு "கவிமுத்து" என்ற பட்டமும் இவருக்கு கிடைத்து இருக்கிறது.

இலங்கை தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகள் உதவி விரிவுரையாளராக பணியாற்றிவிட்டு தற்போது இலங்கை உயர்தொழிநுட்ப நிறுவகத்தில் முகாமைத்துவ விரிவுரையாளராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார்..

கவிதையில் நல்ல இலக்கை


எட்ட வேண்டும் என்பதே இவரது ஆசை.அதற்கான ஆரம்ப முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடத்துணிந்து முயற்சிக்கிறார்.ஷிப்லியின் கலை ஆர்வம் பனித் தூறளாய் பரவிப் படர துவழா  அன்போடு வாழ்த்துகின்றேன் ..!!!!!

ஞாயிறு, 4 டிசம்பர், 2011

தாமரை(04)







பெயர் : குமாரி கே.எஸ்.செண்பகவள்ளி (மலேசியா)
                     (K.S.SENBAKAVALLY)
உலகச் செம் மொழிகளில் உயர் தனிச் சிறப்புடையது தமிழ் மொழி உலகில் வாழும் தமிழ் பேசும் இதயங்கள் தமிழை உயிராய், உணவாய் ,உணர்வாய் ,உழைப்பாய்,உழைப்பின் விளைவாயக்  கண்டுணர்ந்து வாழ்பவர்கள். 
உலக இலக்கிய
ங்களுக்குள்  தமிழ்  இலக்கியதிற்கு தனியொரு இடமுண்டு
 ஆம்  கடல் கடந்து  வாழும் (மலேசியாவை )பிறப்பிடமாகவும் ,வசிப்பிடமாகவும்  கொடவர் தான்  குமாரி கே .எஸ் . செண்பக வள்ளி (செண்பா ).
                       புதிய பார்வைகளோடு ,  புதிய  சிந்தனைகளோடு நாளைய தலை முறைகளையும் கருத்துக் கொண்டு இலக்கியங்கள்  படைக்க்  வேண்டுமென்று  விரும்புபவர்  சம  காலத்திலும் ,எதிர் காலத்திலும் இலக்கியத்துக்கு என்ன நாம் பங்களிப்பை செய்யப்  போகிறோம் என்று சிந்திப்பவர் .





சுமார்  (25)வருட  காலங்களுக்கு  மேலாக கலை இலக்கியப்  பயணத்தில் உலா வந்தது கொண்டிருக்கின்றார்
கல்வி ..,
கல்வி : Bachelor in Business Administration
BBA (Hons), USA  வரை  கற்றவர்

தொழில் :
.தற்போது  இவர்  மலேசியாவில்  மலேசியத் தேசியப் பழஞ்சுவடிக் காப்பகம் (ATIONAL ARCHIVE OF MALAYSIA) அதிகாரியாக  (ARCHIVIST) கடமை  புரிந்து வருகின்றார்.

இலக்கியப் படைப்புகள்: சிறுகதைகள்,கவிதை (மரபு, புதுக்கவிதை, ஹைக் கூ) புதுக்கவிதை, ஹைக் கூ)   கட்டுரை  ,வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள்)என எழுதி வருகிறார் .
கல்வி ,வறுமை ஒழிப்பு,  குழந்தை தொழிலாளர் ஒழிப்பு,   பெண்கள் விழிப் புணர்வு ,சமூக நீதிக் கொள்கை  போன்ற பல  சிந்தனைகளை  தனது  எழுத்துக்களோடு வெளிப்படுத்திக்  காட்டுபவர்.


தனது (13)வது வயதில் 1986 - ல் முதலாவது கவிதை தமிழ்நேசன்மலரில்  வெளியானது அதைத் தொடர்ந்தது
1990 - முதலாவது சிறுகதை - தமிழ்நேசன் 70ம் ஆண்டு மலர்
2004 - முதலாவது ஆய்வுக்கட்டுரை - வெளியாகின 
இதுவரை
கவிதை (மரபு, புதுக்கவிதை, ஹைக்கூ) : 65
இணைய இதழ் படைப்புகள் : 15
சிறுகதை, ஒரு பக்கக் கதைகள் : 46
ஆய்வுக்கட்டுரைகள் : 57 (மலாய் மொழியில் 6)
விமர்சனங்கள்  என்று  எழுதி வருகின்றார்
பெற்ற விருதுகள் ,

வாசகர் நற்பணி விருது (VNV - 2005)
சிறந்த சேவையாளர்   விருது     (2007)போன்றவற்றை

பரிசுகள் : சிறுகதை, கவிதை, கட்டுரை
நாளிதழ், வார, மாத இதழ்கள், பொது இயக்கங்கள் நடத்திய இலக்கியப் போட்டிகளில் பங்குக் கொண்டு பல பரிசுகள் பெற்றுள்ளார் .
 அவைகள்,

தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கம்,
கிள்ளான் வாசகர் இலக்கியச் சோலை,
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்,
மக்கள் ஓசை,
தமிழ் நேசன்,
மன்னன் மாத இதழ்,
சூரியன் மாத இதழ்,
மலேசியப் பழஞ்சுவடிக் காப்பகம்,
பொது இயக்கங்கள் போன்றவைகள்



பொதுச்சேவை:
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் : துணைச் செயலாளர் ,
சுங்கை சிப்புட் இந்தியர் இயக்கம் : துணைச் செயலாளர் ,
சுங்கை சிப்புட் வாசகர் இயக்கம் : தலைவி,
இலங்கை  .தாடகம் கலை இலக்கிய வட்டம் :  ஆலோசகர் .


தற்சமயம் ஈடுபட்டிருக்கும் இலக்கியத் துறைகள்

நாளிதழ், வார, மாத இதழ்களில் சிறுகதை, கவிதை, கட்டுரை எழுதி வருகின்றார் .

“தங்கமீன்”, “திண்ணை”, “மலேசிய எழுத்துலகம்” ஆகிய
இணையத்தளங்களில் படைப்புகளை எழுதி வருகின்றார்

நாட்டின் தேசத்தலைவர்கள், முக்கியமான நாட்களை குறித்து ஆய்வுக்
கட்டுரைகள் எழுதி வருகின்றார் .

மலேசிய மண்ணில் (கலை உலகில் )தமிழ் மொழி இலக்கியத்தின் எல்லைகளை விஸ்தரித்துக் கொண்டிருக்கும் பெருமிதம் மிக்க சகோதரியின் தொடர்புகளுக்கு ,


பெயர் : குமாரி கே.எஸ்.செண்பகவள்ளி
(K.S.SENBAKAVALLY)

முகவரி : 516, தாமான் துன் சம்பந்தன்,
31100 சுங்கை சிப்புட் (வ),
பேராக் டாருல் ரிட்சுவான், மலேசியா
மின்னஞ்சல் -: ksvally@yahoo.com

பூமிக்கடியில்ஈரம் இருக்கின்ற இடமெல்லாம் தன் வேர் விரல்களை நீட்டும் அடி மரம் போல்
சென்பாவின் சிந்தனைகளும் நீண்டு செல்ல இதயம் பிழிந்த வாழ்த்துக்கள் தென்றலாய்  தடவிக்  கொள்ளட்டும் ..!