ஞாயிறு, 10 ஜூலை, 2011

தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் அனுதாபம்

புகழ் மணம் வீசிய பேரறிஞர் தமிழ் பேராசான் அமரர் கா.சிவத்தம்பியின் மறைவு தமிழ் உலகுக்கு மிகப் பெரும் பாரிய இழப்பாகும்.பேராசிரியர் ஒரு தமிழ் களஞ்சியம் (பொக்கிசம்) ஆவார். என தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் அமைப்பாளர் கலைமகள் ஹிதாயா றிஸ்வி தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.தமிழில் தொல்காப்பியம் முதல் நவீன இலக்கியங்களான நாவல்,கவிதை,சிறுகதை,விமர்சனம்,சினிமா,பத்திரிகையியல்,அரசியல்,சமூகவியல்,பொருளாதாரம் என பலதுறையும் விரவி நிற்கும்.பேராசிரியர் ஆங்கில அறிவின் மூலமாக தமிழை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் சுமார் 70 இற்கு மேற்பட்ட தமிழ் நூல்களை தமிழ் பேசும் உலகிற்கு தந்துள்ளார்.200 இற்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியுள்ளார்.சங்க கால இலக்கியம் முதல் 20 ஆம் நூற்றாண்டு இலக்கியம் வரை அடங்கியுள்ளது.பேராசிரியர் அவர்களது இழப்பு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல,ஈழத்து எழுத்தாளர்களுக்கும் தமிழ் மொழிக்கு ஈடு செய்ய முடியாத தொன்றாகும்.அன்னாரின் பிரிவால் வாடும் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஞாயிறு, 3 ஜூலை, 2011

தடாகம்' கலை- இலக்கிய வட்டத்தின் அகஸ்தியர் விருது.

இலங்கை 'தடாகம்' கலை, இலக்கிய வட்டத்தினால் கலை, இலக்கிய துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் படைப்பாளிகளை கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் சாய்ந்தமருது அல்ஹிலால் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.எழுத்தாளர் 'கலைமகள்' ஹிதாயா ரிஸ்வியின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எம்.ஏ.அப்துல் றஸாக், ஏ.எம். ஜெமீல் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் 'அகஸ்தியர்' விருதுதினையும், 'கலைத்தீபம்' பட்டத்தினையும் பெற்றுக்கொண்ட கவிஞர் யாழ் அஸீம், கவிஞர் மன்னார் அமுதன், 'தமிழ் தென்றல்' அலி அக்பர்,கவிஞர் நஜ்முல் ஹுஸைன்,கவிஞர் பொத்துவில் அஸ்மின், கவிஞர் கிண்ணியா அமீரலி ஆகியோரை படத்தில் காணலாம். விருது பெற்ற படைப்பாளிகளுக்கு தடாகம் கலை இலக்கிய வட்டம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.....