வியாழன், 6 ஜனவரி, 2011

தடாகம் கலை இலக்கிய வட்டம்...

இலங்கையில் தமிழ் கலை இலக்கிய வளர்ச்சியில் தடாகம் கலை இலக்கிய வட்டமும் தன் பங்களிப்பினை சிறப்பான முறையில் செய்து வருகின்றது!தரமான கலை இலக்கிய,சமுக,சேவை உள்ளங்களையும்,கல்விமான்கள்,சிறந்த அறிவிப்பாளர்கள்,ஊடகவியலாளர்கள் என்று இனங்கண்டு 50 க்கு மேற்பட்டவர்களை கலைத்தீபம் விருது வழங்கி கௌரவித்து வந்துள்ளது.1985 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பித்த தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் அமைப்பாளராக கலைமகள் ஹிதாயா அவர்கள் பணி புரிந்து வருகிறார்.தடாகம் கலை இலக்கிய வட்டம் "தடாகம்"எனும் பெயரில் கலை இலக்கிய சஞ்சிகை சுமார் 12 இதழ்கள் வரை வெளியீட்டுள்ளது.தற்போது தடாகம் கலை இலக்கிய வட்டம்(அகஸ்தியார் ஞாபகார்த்த விருதினையும்)வழங்குவதற்கான ஏற்பாடுகளையும்  செய்துள்ளது.பல கலை இலக்கிய முயற்சிகளை மேற்க்கொண்டு வருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக