புதன், 18 ஏப்ரல், 2012

இன்று காலை ரம்பாவெல – மிஹிந்தலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தினைச் சேர்ந்த என் அன்புத் தம்பி ஜாபீர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார் தற்போது அனுராதபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு உள்ளார் விரைவில் குணம் பெற எனது நட்புள்ளங்களை பிராத்தனை செய்யுமாறு அன்போடு வேண்டுகின்றேன்........

வாகன விபத்தில் ஊடகவியலாளர் நூரானியா ஹசன் மரணம்(இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)என் உயிர்  சகோதரர்  நூரானியா ஹசன்  நேற்று 

தம்பி ஜனூஸ் என் இல்லம் வந்து இருந்த சமயம்  என்னுடன்  மிக நீண்ட நேரம்  தொலை  பேசியில்  பேசிக் கொண்டு இருந்தார் ஆமாம் சுமார்35 வருடங்களுக்கு  மேலான  உறவு  முதல் முதல்  என் நானா  சித்தீக்  காரியப்பார் அவர்களுடன் (அவர் உயிர் தோழன்  )இல்லம் சென்றது  என்னால் என்றும் மறக்க முடியாது என் பாசமான சகோதரர்  முக நூலில்  நான்  எதை எழுதினாலும் கருத்துக்கள் வழங்கி  வாழ்த்துவார்  அப்படியான   (நான்) உயிர் சகோதரனாய்  நேசிக்கம்  நூரானியா ஹசன் இன்று அகாலமான  செய்தி எனக்கு  வந்தது

இன்று காலை ரம்பாவெல – மிஹிந்தலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தினைச் சேர்ந்த சிரேஷ்ட அறிவிப்பாளர் நூரானியா ஹசன் காலமாகியதோடு மேலும் அறுவர் படுகாயமடைந்துள்ளனர்
சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில் அதன் ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஊழியர்கள் நேற்று இரவு யாழ். நோக்கி பயணமாகியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் பயணித்த வாகனம் இன்று காலை 4.30 மணியளவில் மிஹிந்தலை – ரம்பாவ பகுதியில் லொறியொன்றுடன் மோதியுள்ளது. இவ்விபத்தில் வானில் சென்ற இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினைச் சேர்ந்த 6 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், ஸ்தலத்திலேயே சிரேஷ்ட ஒலிபரப்பாளர்  நூரானியாஹசன் மரணமடைந்துள்ளார்.
திரு., திருமதி யோகராஜன், ஜாபீர், சந்திரகாந்தன், ஜெகன்மோகன் ஆகிய சிரேஷ்ட ஊடகவியலாளர்களுடன் விளம்பர பிரிவைச் சேர்ந்த சந்தன ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.
இலங்கையின்  சிறந்த  விளையாட்டு  விமர்சகரும் , வார்னனையாளருமான  நூரானியாஹசன் முஸ்லீம் சேவை , தமிழ் சேவை , வர்த்தகசேவை (வருமான   சேவை)போன்றவற்றின்( பல்வேறுசேவைகளின் ) பணிப்பாளர் 
கிழக்கு மண்ணில் பிறை   fm வருவதற்கு தன்னை அர்பணித்தவர்  பாடுபட்டவர் இலங்கை வானொலி நிகழ்ச்சிகளை  தரம் உயர்த்தியவர் பல உயர்ந்த பதவிகளை வகித்தவர்

இரண்டு பெண் குழந்தைகளும்  ஒரு ஆண்  குழந்தையும்  தன் அன்பு மனைவிற்கு நூரானியாஹசன் விட்டுச் செல்லும் சொத்துக்கள்  அன்னாரது ஜனாஸா  அனுராதபுர   வைத்திய சாலையில்உள்ளது ஜனாஸா நல்லடக்கம்  இன்று இஷா தொழுகையின்  பின் நல்லடக்கம்  செய்யப் பட உள்ளது
சகோதரர் நூரானியாவின் பிரிவால் ரொம்பவும் மனம்  தங்க முடியாத  நிலயில் கண்ணீர்  வடிந்து ஓடுகின்றது இறைவா  என் தாயாரின் பிரிவுக்குப் பின் நான் விரும்பி நேசிக்கும்  என் அன்பு உள்ளங்களையும்  என்னிடம் இருந்து  பிரித்து விடுகின்றாயே ..!அன்பு நூரானியாவின் பாவங்களை மன்னித்து  சுவர்க்கம் சேர அருள் புரிவாயாக  ஆமீன்.....