திங்கள், 14 மார்ச், 2011

உங்கள் வயதினைக் கொண்டு உங்களைத் தீர்மானியுங்கள் !!!!!

  • ஒரு மனிதன் பத்து வயதிற்கு முன் பாலகன்.அதற்கு மாறாக பத்து வயதிற்கு மேற்பட்டால் அவன்  "பயல்"எனும் நிலைக்கு மாறுகின்றான்.சிறுவனாக  இதே வயதில் கல்வியின் பால் தத்தமது கவனத்தையும் செலுத்துகின்றான்.
  • இருபது வயதில் ஒரு மனிதன் "இளம்மட்டம்"ஆகி விடுகின்றான்.இளைஞராக இவ் வயதில் தைரியமும் பலவித பக்தியும்  ஏற்படுகிறது.
  • முப்பது வயதில் ஒரு "மூர்க்கம்" அடை கின்றான்.இவ்வயதில் தான் நினைத்தபடி வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வாழ்கின்றான்.
  • நாற்பது வயதில் ஒரு மனிதன் "நரையை"அடைகின்றான். அவனது முடியே  சாட்சியாக அமைகின்றது.
  • ஐம்பது வயதில் ஒரு மனிதன் "அறிவு"டையவனாக மாறுகின்றான்.இவ் வயதில் சகலவிதமான அறிவுகளும் ஒரு மனிதனுக்கு ஏற்படுகின்றது.
  • அறுவது வயதில் ஒரு மனிதன் "சொறிச்சலுக்கு"மாறுகின்றான்.இவ்வயதில் நோய்கள் கூட தாராளமாக ஒரு மனிதனுக்கு ஏற்படுகின்றது.
  • எழுபது வயதில் ஒரு மனிதன் "ஏக்கம்"அடைகின்றான்.இவ்வயதில் பல விதமான சிந்தனைகளும் தாக்களும் ஏற்படுகின்றது.
  • என்பது வயதில் ஒரு மனிதன் "மயக்கம்"அடைகின்றான்.அவனுக்கு இவ் வயதில் எதுவுமே திடீரென செய்ய முடியாமல் போய்விடுகின்றது.
  • தொண்ணூறு வயதில் ஒரு மனிதன் "தூக்கம்" அடைகின்றான்.அவனுக்கு இவ்வயதில் உறக்கமே தோன்றும்.தள்ளாடும் நிலைமைக்கும் மாறுபடுகின்றான்.
  • நூறு வயதில் ஒரு மனிதன் "இழுத்துகவுலு" எனும் நிலைக்கு மரணத்திற்கு மாறி விடுகின்றான்.இவ்வாறு ஒரு மனிதனின் வாழ்க்கையில் வயதில் சில மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே செல்கின்றன. மாறாக சிலரது வாழ்வில் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே செல்கின்றன.மாறாக சிலரது வாழ்வில் மாற்றங்கள் ஏற்படும் முன்னே சில மனிதர்களது வாழ்வில் மரணங்களும் ஏற்படுகின்றன.இவ்வுலகில் எந்த மனிதனும் நிலையாக தொடர்ந்து உயிருடன் வாழ முடியாது.என்றோ ஓர் நாள் இவ்வாறான மாற்றங்களுடன் மரணத்தையும் அனுபவிக்கவே மனிதன் இவ்வுலகில் பிறந்து இருக்கின்றான்.இதில் இருந்து மனிதர்களது வாழ்க்கையில் பலவித மாற்றங்கள் ஏற்படவே செய்கின்றன....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக