
எனினும் குறிப்பிட்டுச் சொல்லக் கூ டிய பெண்களில் ஒரு சிலரே கவிதையுலகில் கால் பதித்து நம்பிக்கையை ஏற்படுத்திச் செயல் பட்டு வருகின்றனர் .
அந்த வரிசையில் ஒருவர் தான் இந்த நாடறிந்தபெண் கவிஞர்
நான் அறிந்த நல்ல தமிழ்க்கவிஞர், திறமையான அறிவிப்பாளர் என் நட்புக்கு முதல் பரிசு இவர்
இலக்கண வரம்பும் ,மரபும் மாறது கவிதை புனையும் வல்லபம் மிக்கவர்
வெள்ளமென இனிக்கும் நல்ல தமிழோசை' !
சொல்லச் சொல்லச் இனிக்கும் சுந்தரந் தமிழோசை !
கவிதையென்னும்ஒளிப்படக் கருவி மூலம் தன்னிதயத்து உணர்ச்சிகளுக்கு வண்ணமான வடிவமைக்கும் கவி வல்லவள் .
கலை,இலக்கிய நெடும் விழிப்புக்கு விசாலமான மூலம் பற்றி சரியாகப் புரிந்து கொண்டுள்ள நாகபூஷணியின் சமூக நோக்கும் இன , மொழி ,மத பேதமற்ற மானிட நேயமும் வெவ்வேறு
வகைகளில் கவிதைகள் முழுவதும் இழையோடி நிற்பதை அவதானிக்கலாம் .
அடக்கமான சுபாபம் கொண்ட அறிவிப்பாளர் .கன மிகக் தரமான படை ப்புக்கள் ஏறத்தளக் கடந்த் பத்தாண்டுகளுக்கு மேலாக இலங்கையின் அனைத்து இதழ்களிலும் உலா வந்துள்ளன
கம்பளையில் பிறந்த்த நாகபூஷணி ஆரம்பக் கல்வியை 3 ம் தரம் வரை கம்பளை மகளிர் கல்லூரியில் பயின்றார் .பிறகு நாவலப்பிட்டி சென் அன்றுஸ் மகளிர் கல்லூரியில் பத்தாம் தரம் வரை பயின்று உயர் தரத்தினை கதிரேசன் கல்லூரியில் கற்றார் .
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைத் துறையில் பட்டப் படிப்பை ஆரம்பித்தார்.
நாட்டின் அன்றைய நிலவரங்களால் சூழ்நிலைக் கைதியாகி பிறகு பேராதனை வளாகத்தில் 1994 இல் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்தார்
.கண்டி மலையக வானொலிச் சேவையில் 1994 இல் பகுதி நேர அறிவிப்பாளராக சேர்ந்தார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பகுதி நேர அறிவிப்பாளராக 1995 இல் தெரிவு செய்யப்பட நாகபூஷணி தமிழ் தேசிய சேவையின் கல்வி நிகழ்ச்சிகளில் பணியாற்றினார்.பின் வர்த்தக சேவையில் பகுதி நேர அறிப்பாளரானர்.1996 இல் நிரந்தர தயாரிப்பாளராகவும்,அறிப்பாளரா
யினைப் பூர்த்திசெய்தார் தேசிய தொலைக் காட்சியின் 'ஆயுபோவன் "மற்றும் 'மனையாள் மண்டபம் 'போன்றவற்றில் தோன்றியதுடன் 2000 மார்கழித் திங்கள் முதல் இலங்கை ரூபவாஹினியில் செய்திஅறிப்பாளராகினார் .இலங்கைலிருந்து கவி புனையும் திறனும் ,கட்டுரைகள் எழுதும் ஆற்றலும்கொண்டவர்.இசையிலும் ,நடனத்திலும் கூட ஆர்வம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது .
சம கல நிகழ்ச்சிக்குள் அந்திப்புழுதை அழகு செயும் 'அந்தி நேரச் சிந்துகள்' நிகழ்ச்சி தனித்துவம் பெற்று விளங்குகின்றது.இலக்கியங்களைப் போன்று வானொலிகளும்,வைகறை,பொன்னந்தி,நி

நிகழ்ச்சியின் கவிதைச் சித்தரிப்பு
பூஷணி தனிச் சிறப்பு
கவி நயங்களில் தொனிக்கும் நயப்பு
இருக்கிறது அதற்கொரு தனி மதிப்பு......!
ஓர் இலக்கியக்கரு சங்க அகத்திணை, புறத்திணையில் ஆரம்பித்து பல ஆண்டுகளைத்தாண்டி நவீன கால சினிமாப் பாடலுக்குள் சங்கமிக்கும் போது ஏற்படும் சுவைக்கு கவித்துவத்தினூடாக அழுத்தம் கொதிக்கிறது நிகழ்ச்சி.குறிப்பிட்டதொரு விடயம் சம்பந்தமாக புராண இலக்கியங்கள்.இடைக்கால கவிஞர்கள் நிகழ்கால சினிமாக்கள் சொல்லும் வித்தியாசமான கருத்துக்களின் நடுவில் நின்று தனது கருத்தையும் அறிவிப்பாளர் முன்வைக்கும் போது "தமிழின் வளமும்,செழுமையும்"பிரத்தியட்
இலங்கையின் வானொலி நிலையங்களில் கடமை புரியும் பெண் அறிவிப்பாளர்களை "கவிதை சொல்லும்" விடயத்தில் நாகபூஷணி மிஞ்சிவிட்டார்
என்பதே பலரதும் கருத்து.சில கருப் பொருட்களைக் காட்சிப் பொருளாகக் காட்டும் திறம் இவரிடம் நிறையவே உள்ளது.சிலர் கவிதை சொல்லும் போது அவை கட்டுரை வடிவம் பெறும் சந்தர்ப்பங்களும் உண்டு.சிலர் கவிதை சொல்லும் போது அதில் வைக்கோல் சுவை கூட தெரிவதில்லை.ஆனால் நாகபூஷணி கவிதை சொல்லும் விதம் இறந்து கிடக்கும் இதய நரம்புகளையும் உயிப்பிக்கின்றது.
தமிழ் தன்னைபேசுகின்ற உலகந்தன்னில்
தனித்துவமாய் இலங்கும் வான் ஒலியாய் இன்று ,
அமுதெனவே ஒலிகின்ற தென்றல் தன்னின்
அறிவிப்பு நங்கையவள் நாகபூஷணி.!
குமுறுகின்ற நெஞ்சுடனே காலம் தள்ளும்
குன்றுகளுக்குக் கிடையில் வாழ் மாந்தர்க்குள்ளே ,
அமுதாக வந்ததனால் தானே நீயும்
அற்புதமாய் தமிழ்தனிலே நர்த்திக்கின்றாய் !
வானலையில் இவள் குரலோ ஒலிக்கும் போது
வண்டமிழோ உவகையதால் எழுந்து நின்று
கானமிசைக் கின்ற பெரு காட்சி தன்னை
காணுகையில் நெஞ்சமெலாம் மகிழ்ச்சிப் பூக்கள்.
தேனமுதாய் தெள்ளு தமிழ் நாகா வாயுன்
தெவிட்டாது வருவதுதான் சிறப்பு ஆகும்.
கானகத்து மான்மயிலும் எழுந்து ஆட,
கன்னியிவள் குரல் சொல்லும் கவிதை போதும்....!
அறிவிப்பால் நெஞ்செமெலாம் நிறைந்து நிற்கும்
அழகுமலை தந்த பெரு நாகா இன்று
செறிவு நிறை அறிவுதனைக் கொண்டு இங்கு
செதுக்கிய நற் கவிகளினைக் கோர்வையாக்கி
நெறிதவழ நெற்றிக்கண் என்ற நல்ல-
நெஞ்சு நிறை கவிதை நூல் தருகின்றாளே
அறிவுதனை கொண்டனள் நாகா உந்தன்
அழகுதமிழ் கவிகளதோ என்றும் வாழும்...!
மரபோடு புதுசுகளும் கலந்து இங்கு
மகிமையொடு வருகிறது நெற்றிக்கண்ணும்....!
சிரம் தாழ்த்தி நிற்கிறதே இலங்கை பூமி
சீக்கிரத்தில் இவள் பெரிய ஒளவையாக -
உராம் பெற்ற கவிக்குயிலாம் சரோஜினியாய்
உருவாவாள்...! இவள் கவிதைக் காலம் வென்று
நிரந்தரமாய் உதவிடுமே வாழ்க நீயும்...!

நாகா நீ எழுதுகின்ற கவிகள் யெல்லாம்
நானிலத்தில் வாழுகின்ற மனுசங்கட்குள்,
சாகாவ ரம்பெற்று வாழும் என்று
சாற்றுகின்றேன்...! உன் கவிதை எழுந்து பேசும்.....!
பாகாக உருகிவிடும் கவிதை காணும்
பார்தன்னின் மனசெல்லாம் என்றும் உந்தன்
நோகாத கவியெல்லாம் உலகை வெல்லும்
நோக்கங்கள் சிறப்பாக பெற்றாய் வாழ்க....!!!!
பல விருதுகளையும் ,பாட்டுக்களையும் பெற்றுள்ள நாகபூஷணிக்கு தடாகம் கலை இலக்கிய வட்டம்'' கலைத்தீபம்'',
விருது வழங்கிகௌரவப்படுத்தியது தற்போது வசந்த்தம் தொலைக்காட்ச்சியில் தனது திறமையினை வெளிப் படுத்தி வருகின்றார் .
இந்த பைந்தமிழ்ப் 'பாவை'யின் நறுந் தமிழ் பாக்கள் இன்னும் செழித்துப் பூக்கட்டும்.தமிழுக்கினிமை சேர்க்கட்டும் என
இதயங்கனிந்து வாழ்த்துகிறேன்...........!