சனி, 15 அக்டோபர், 2011

கலைமகள் ஹிதாயா றிஸ்வி

கிழக்கின் சொத்து கலைமகள் ஹிதாயா றிஸ்வி
                     பேராசிரியர்  க ...அருணாசலம் :தமிழ்த்துரை பேராதனைப் பல்கலைக்கழகம்.....கவிஞர் அஸ்மின்,..!

தென்றலே கவிபாடும் தென்கிழக்கு  மண்ணின் கிராமம் ஒன்றின் தெருக்கோடியில் நின்று கொண்டு கூழான் கல்லொன்றை கூலிக்கெடுத்தாவது விழிகளை மூடிக் கொண்டு வீசினால் விர்ரென்று விரைந்தேகும் அக்  கல்  விழும் இடம் ஒரு கவிஞனின் வீடாக இருக்கும் இல்லாவிட்டால் ஒரு எழுத்தாளனின் தலையாக இருக்கும்.
கன்னித் தமிழின் கழுத்துக்கு கனகமணி மாலையிட்டு விண்ணுலகம் விரைந்திட்ட முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாந்த அடிகளார்.அவர் அன்புச் சீடன் ஆசுகவி புலவர்மணி ஆ.மூ.சரிபுதீன் போன்ற ஆன்றோர்களும் ;வாடிநிற்கும் பயிராய்,வாழ்வோடிந்த உயிராய்,வரண்டு போன நதியாய் கிடந்த ஈழத்து இலக்கியத்தை வளப்படுத்தி வாகை சூடிய சான்றோர்களும் பிறந்து சரித்திரம் படைத்த மண் தென் கிழக்கு மண்.அம் மண்ணில் நீலாவணன்,யுவன்,பாண்டியூரான்,
எம்.ஏ. நூஃமான்,மருதூர் கொத்தன்,அ.ஸ.அப்துல் ஸமது ,அன்பு முகைதீன்,எம்.எச்.எம் அஷ்ரப்,மருதூர்க்கனி,ஜின்னா ஷரிபுத்தீன்,ஆஷாத் மௌலானா.சோலைக்கிளி,பொத்துவில் ஏ.மஜீத்,ஏ.இக்பால்,பாவலர் பஸீல் காரியப்பர்,கவிவாணன்,கலையன்பன் அஸீஸ்,முத்து மீரான்,மருதூர் ஏ.மஜீத்,ஏ.ஆர்.எம்.சலீம்,மருதூர்வாணர் ஈழமேகம,ஈழக் குயில் இத்ரீஸ்,அக்கரையூர் அப்துல் குத்தூஸ்,எஸ்.ரபீக்,அக்கரை மாணிக்கம்,அன்புடீன்,பாலமுனை பாரூக்,ஒலுவில் அமுதன்,கவிஞர் அஸ்மின்,.....என்று உலக அதிசயமான சீனச்சுவர் போன்று இற்றைவரை நீண்டு செல்லும்..!

வைரக்கற்களோடு வைரக்கல்லாக தன்னையும் பதித்துக் கொண்ட பெண் படைப்பாளி தான் கலைமகள் ஹிதாயா றிஸ்வி..

இணையத்தில் ஒரு கவிதை இடம் பெற்றால் 'நோபல்'பரிசு 'லெவலுக்கு'கூத்தாடும் சில படைப்பாளிகள் தம் கவிதை மக்கள் இதயங்களில் இடம் பிடித்திருக்கின்றதா ..?என்று ஒரு போதும் எண்ணிப் பார்ப்பதில்லை.!எழுதப்படுவதால் மட்டும் எந்தப் படைப்பும் வாழாது.எண்ணற்றவர்களால் படிக்கப்படுவதாலும் எண்ணங்களில் பதிக்கப்படுவதாலுமே அப்படைப்பு என்றென்றும் ஜெயம் பெற்று ஜீவிக்கும்..!
அதனால்,அப்படைப்பாளியின் பெயரும் முழுநிலவாய் பிரகாசிக்கும்..

கவிதைக்கு அனுபவம் வானத்திலிருந்து மழையாய் பொழிவதில்லை.வாழ்க்கையில் இருந்து தான் அது கிடைக்கிறது என்ற கருத்துக்களோடு கைகுலுக்கிக் கொள்ளும் இவர்,ஈழத்துப் பெண் படைப்பாளிகள் வரிசையில் தன்னையும் ஒருவராக நிலைநிறுத்திக் கொண்டவர்..!
ஈழத்து இலக்கியத்தை கொத்திச் செதுக்கி  அழகு படுத்தியதில் முஸ்லிம் பெண் படைப்பாளிகளின் பங்கும் அளப்பரியது.ஆனால் பெண் படைப்பாளிகளின் பங்கோ அரிதானது.ஆங்காங்கே தொட்டம் தொட்டமாக எழுந்த சில பெண் படைப்பாளிகள் தோல்விகளையெல்லாம் தோற்கடித்து எழுவான் கதிர்களாய் எழுந்து வந்திருப்பது  சாதனைக்குரியதே..!

  அம்பாறை மாவட்டம் சாய்ந்த மருதுவில் வைத்திய  கலா நிதி  யூ.எல் ஏ.மஜீத் : ஜைனபமஜீத்
  தம்பதிகளின்  ஐந்தாவது பிள்ளையாக பிறந்தார் .  ஹிதாயா  ஏ.மஜீத்என்ற  இயற் பெயர் கொண்டவர்.

  நாடறிந்த  வீ ர்ருந்த  இந்த பெண் கவிஞர் : தான் கற்கும் காலத்திலிருந்தே இலக்கியத்துறையில் ஈடுபாடு கொண்டிருந் தார்.  இவரின் கன்னி கவிதை (புதுக்கவிதை) 1982-04-01 ம் திகதி 'மீண்டும்'எனும் தலைப்பில் தினகரனிலும்,அதேதினம்'சிந்தாமணி'பத்திரிகையில்'அன்னை'எனும் தலைப்பில் மரபுக்கவிதையும் இடம்பெற்றமை விசேட அம்சமாகும்...!

ஆரம்பதிற் கவிதையுலகிற்  கால் பதிக்கத் தொடங்கியவர் தெவிட்டாத  தீந்தமிழை   மரபு  ரசனை கெடாமல் கவிதைகளில்  நளினமாக எடுததாளும்   ஹிதாயா :  அடக்காமான  சுபாவம் கொண்டவர் .! கவிதா  வெறி  கொண்ட  உணர்ச்சிக் கவிஞர் என்பதே  பொறுத்தமாகும்.
 இவரது கனதிமிக்க படைப்புக்கள்  இலங்கையின் அனைத்து இதழ்களிலும்  உலா வரும்  கலைமகள் ஹிதாயா:  நிஷா : மருது :நஹி : எனும் புனைப் பெயரிலும்  எழுதி வருகிறார்.
அன்றிலிருந்து  இன்றுவரை மூன்று தசாப்தகாலமாக மரபுக்கவிதை : புதுக்கவிதை: சிறுகதை :விமர்சனம் :கட்டுரை :மெல்லிசைப்பாடல்கள் : வானொலி நாடகங்கள் :என்று  எத்துறையிலும்   முத்திரை  பதித்து  வருகிறார் ...!
இவரதுகனமிக்க்  படைப்புக்கள்
 இந்தியாவிலிருந்து வெளி வரும்  சமரசம்:கதவு சஞ்சிகைகளிலும்  வெளிவந்துள்ளன
பல்வேறு சமூகசேவை,இலக்கிய மன்றங்களில் அங்கத்துவம் வகிப்பதோடு மலேசியாவிலுள்ள உலகத்தமிழ் கவிஞர் பேரவையிலும் முக்கிய இடத்தையும் வகிக்கின்றார்
.இலங்கை வானொலியில் பல நிகழ்சிகளிலும் குரல் கொடுத்துள்ள இவர்
ரூபவாஹினிக்கவியரங்கிலும் முதன்முதலில் பங்குகொண்ட முஸ்லிம்பெண் என்ற பெருமையைத் தட்டிக் கொண்டவர்
,அத்துடன் இலங்கை வானொலி மாதர் மஜ்லிஸ் பிரதித் தயாரிப்பாளராகவும் செயற்பட்டுள்ளார்.
  இவரது இலக்கியப் பனியின் முக்கிய கட்டமாக 'தடாகம்'
இலக்கியச் சஞ்சிகையை வெளியிட்டமையைக் குறிப்படலாம்.ஒரு பெண்ணாக இருந்த போதிலும்  கூட 12  இதழ்களை இவர் வெளிக் கொண்டு வந்தார்.

 இவ் இதழ்களில் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா,ஸீ.எல்.பிரேமினி,பேராசிரியர் சு.வித்தியானந்தன்,ஏ.யூ.எம்.ஏ .கரீம்,கல்ஹின்னை ஹலீம்தீன்,புன்னியாமீன் ஆகியோரின் புகைப் படங்களை முகப்பட்டையில் பிரசுரித்து கௌரவித்துள்ளார்.
.சில நூல்களின் வெளியீட்டு விழாக்களை  கண்டி : குருநாகல்  போன்ற இடங்களிலும் நடத்தியுள்ளார்.
.இவர் கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்தாலும்   கொழும்பு-வெள்ளவத்தை  ஹோட்டல்  சபயாரில்  இலங்கை  வானொலி  அறிவிப்பாளர் நாகபூஷணி கருப்பையா எழுதிய 'நெற்றிக்கண்'கவி நூலை வெளியீட்டு  சாதனை படைத்தார்.ஒரு முஸ்லிம் பெண் எழுத்தாளர் என்ற வகையில் இவரின் பணி பாராட்டத்தக்கது.
.         கல்வித் தகமை ...
ஆரம்பக்கல்வியை முஸ்லிம் பெண்கள் கல்லூரி
யில்(ஆங்கிலப் பிரிவிலும்):உயர் கல்வியை  கல்எளிய முஸ்லிம்  பெண்கள் அரபீக் கலா  பீத்தில்  (அரபுமொழியிலும்)).கற்றார் .தமிழ்மொழியில்  இவர்  கல்வியை  தொடர வில்லை  என்பது  குறிப்பிடதக்கது .
.இவர்  வெகுசனதொடர்புசாதன டிப்ளோமாவையும் பூர்த்திசெய்துள்ளார்.
       நூல்கள்...
1985   ல்"நாளையும் வரும்" புதுக் கவிதை  நூலை  த
ந்தார்.
 
2000 ல் சிந்தனை வட்டத்தின்   வெளியீடாக  (தேன் மலர்கள்) மரபுக் கவிதை நூலை  தந்தார் .(இது இலங்கையில் ஒரு  முஸ்லிம்  பெண் கவிஞர் வெளியிட்ட முதலாவது   தொகுதி இதுவாகும் ...)
அத்துடன்   "இரட்டைத்  தாய்யின் ஒற்றைக் குழந்தை" புதுக் கவிதை  நூலை  கவிஞர்  மஸீதா புன்னியாமீனுடன்  இணைந்து 2000  ஆண்டில் வெளியிட்டுள்ளார்  அடுத்த நூல்இரண்டு கிழக்கு  மாகான பெண் கவிஞர்களுடன் இணைந்து விரைவில் வெளியிடவுள்ளார்.!
 இலங்கையில் வெளியான  பாலங்கள்:எழுவான் கதிர்கள் : புதிய மொட்டுக்கள் :  மனிமலர்கள்: புதிய பூக்கள்  போன்ற பல   தொகுதிகளிலும்  இவரது கவிதைகள் இடம்  பெற்றுள்ளன.
  இவரது தரமான  கவிதைகள் பல [அல் பஸீர்  அகமட் அல் அன்சாரி _அல்  காதிரி  அவர்களால்  அரபு  மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதோடு :பேராசிரியர்  க ...அருணாசலம் (தமிழ்த்துரை:பேராதனைப் பல்கலைக்கழகம்)  அவர்களது  மலையக  இலக்கிய ஆய்விலும்  உள்ளடங்கப் பெற்றுள்ளது...!
தென்கிழக்குபல்கலைகழக தமிழ்துறை மாணவி நிந்தவூர் ஆசிரியை ரிஸ்லா அவர்களாலும்,கிழக்குபல்கலைகழக தமிழ்துறை மாணவ ஆசிரியர் முபாரக் அவர்களாலும் ஆய்வுசெய்து ஆய்வேடு சமர்பித்துள்ளனர்...
இவரது இரண்டு கவிதை நூல்கள் இந்தியாவில் பேராசிரியர் அக்னி புத்திரன் அவர்களால் சிபாரிசு செய்யப்பட்டு பல்கலைக் கழக மட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது
 இலங்கை  அரசின் இலவச  பாடப்  புத்தகமான (தமிழ்  மொழியும்  இலக்கியமும் ) தரம்  9 நூலில் இவரது "வாழும் வழி"எனும்  கவிதை  இடம்  பெற்றுள்ளது..!
 ஈழ
த்து  இலக்கிய  வரலாற்றில்  இது  ஒரு  பெண்  படைப்பாளிக்குகிடைத்த மகத்தான  பரிசாகும் ...!
விருதுகள்...
இவர் கலை  இலக்கிய  உலகில் சிறகு கட்டிப் பறப்பதற்கு இவருக்கு கிடைத்த பரிசுக்க விருதுகள்  ஊ க்கம் கொடுத்து ள்ளன .
1985ல்  தேசிய இளை
ர் சேவை  மன்றத்தினால்  அகில இலங்கை  ரீதியில் நடாத்தப்பட்ட கவிதைப்  போட்டியில்  மு தலாமிடம்  பெற்றமைக்காக  ஜனாதிபதியின் விருதும் : சான்றிதழும் பெற்றிருக்கிறார்  .
1999 ஆம் ஆண்டடில் "ரத்னதீபம்"  சிறப்பு விருது  பெற்றுக்  கொ
ண்ட முஸ்லிம்  பெண் கவிர்  இவர் .!2002 ஆம் ஆண்டு  இலங்கை முஸ்லிம்  அமைச்சின்  அனுச   னையுடன்  நடாத்தப்பட்ட  உலக இஸ்லாமிய  தமிழ்  இலக்கிய  மா நாட்டில் இளம்  படைப்பாளிக்கான விருது வழங்கிகௌரவப் பட்டவர்களில்  இவரும்  ஒருவர்.!
.2007 ஆம் ஆண்டு உயன்வத்தையில்  நடைபெற்ற இலக்கிய விழாவில்  'கலையரசு'பட்டம் வழங்கி  கௌரவிகப்பட்டார
2011 லக்ஸ்டோ     கலை  இலக்கிய  சமூக    அபிவிருத்தி  நிறுவனத்தால் ;(மருத மணி)
''கலை முத்து ''பட்டங்கள்  வழங்கி  கௌரவிகப்பட்டார் ..
அல்-ஹாஜ்  எம் . ஆர். எம் . றிஸ்வி அவர்களின்  மனைவியான
இவர் குருநாகல் மாவட்டத்தில் பொல்கஹவெலயில்   வசித்து வருகின்றார்
.மிக விரைவில் 'விடியும் வானம்' எனும் சிறுகதை நூலை வெளியிட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கவித்துவ  வீரும் : கருத்து வீச்சும் ;ஆழ்ந்தகன்ற மூகப்  பார்வையும்  கொண்ட  கவிதைகள்  கதைகள்  பலவற்றை  மேலும் தந்து ஈழத்து  தமிழ்  கலையுலகிற்கு  வளம்  சேர்ப்பார்  என  நம்புகிறோம். 
 

எனது ஏனையத் தளங்கள்...


என்னை தொடர்பு கொள்ள விரும்புவோர்கள்!


"kalaimahel hidaya risvi"
No:-677.Ahamed road,
sainthamaruthu-14
(E.P).
Srilanka..
tele phone:-94-077-7473723
e-mail:-s.k.risvi@gmail.com,
inulhidaya@gmail.com,
inulhidaya@ymail.com.
Face book address:-Kalaimahel hidaya risvi
Skype address:-mohemedrislan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக