செவ்வாய், 18 அக்டோபர், 2011

தாமரை .........2 மின்னல் வேக அறிவிப்பாளர் - முத்தையா ஜெகன்மோகன்.....


முத்தையா ஜெகன்மோகன் நுவரேலியா மாவட்டம், டயகம எனும் ஊரில் பிறந்தார்.
  இவர் நுவரெலியா பரிசுத்த திருத்துவ கல்லூரியில் 7 ம் வகுப்பு வரை படித்துவிட்டு அதன் பின்பு யாழ்ப்பாணம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் க.பொ.சா.தரம் படித்து முடித்தார்
.இவர் உயர் தரக் கல்வியை தொடர்ந்து கண்டி புனித சில்வர்
ஸ்டர்ஸ் கல்லூரியிலும்,நாவல் நகர் கதிரேசன் கல்லூரியிலும் கற்றார்.
.1980  ம் ஆண்டு பொறியியளாளராக அரச பொறியியற் கூட்டுத்தாபனத்தில் கடமையில் சேர்ந்தார்.
மலையக மைந்தனாகிய இவர் , தமிழ் அறிவை யாழ்ப்பாணத்தில் கற்றார்.
 நுவரெலியாவில் பிறந்தாலும் வளர்ந்தது வடக்கில் என்பதை பெருமையோடு என்றும் கூறுவார்.
முத்தையா ஜெகமோகனின் தந்தை வெள்ளைச்சாமி முத்தையா,தாய் செல்வநாயகி முத்தையா.
 நான்கு சகோதரிகளும்,இரண்டு சகோதரர்களும் இவருடன் பிறந்தவர்கள்
இவர் குடும்பம் ஒரு கலைக்குடும்பம்
.இவர் கடைசி மகன்.
 சகோதரி நம் அபிமானம் பெற்ற பிரபல வானொலி,தொலைகாட்சி அறிவிப்பாளர் உமா சந்திரா முத்தையா
.இவர் சுன்னாகம் இராமநாதன் கல்லூரியல் கல்விகற்று பேராதனை பல்கலைக்கழக சிறப்பு பட்டதாரி.
அத்துடன் விரிவுரையாளராகவும் கடமையாற்றியவராவார்.
முத்
தையா ஜெகமோகன் 1993 இல் பகுதி நேர அறிவிப்பாளராக( 6 பேர்களில் இவரும் ஒருவராக தெரிவு செய்யப்பட்டார்)
வர்த்தக சேவையில் சிறந்த புள்ளிகளுடன் தெரிவானவர்.
அத்தோடு எந்த விதமான அரசியல் செல்வாக்கில்லாமல் வந்தவர் என்பதில் பெருமையடைகிறார்
 

1994 - 1996 வரை ஆசிய சேவையில் ஆரம்பகாலத்தில் தொடர்ச்சியாக கடமையாற்றி, 1998 இல் தமிழ் நாடு புதுக் கோட்டை மாவட்டம் ஆலங்குடி என்ற இடத்தில் இவருக்கு இலங்கை வானொலி ரசிகர் (ஆசிய சேவை) மன்றத்தின் தலைவரான துரைசெல்வராஜாவால் "மதுரக் குரலோன்"என்ற பட்டம் சூட்டி கௌரவிக்கப்பட்டார்.

.தொடர்ச்சியாக பல நிகழ்ச்சிகளில் பங்குபற்றியதோடு வானொலியில் அணைத்து நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றினார்.
குறிப்பாக கிரிக்கட் வர்ணனையில் குறிப்பிட்ட நேரத்தில் கொடுக்கப்பட்ட சாராம்சத்தை சில நிமிடங்களில் சொல்வதில் வேக அறிவிப்பாளர் என்று பாராட்டப்பட்டார்

 2001 ம் வருடம் மறக்க முடியாத வருடம். முத்தையா ஜெகமோகன் வாழ்வில் மறக்க முடியாத அம்சம்.
இவர் தாய் நாட்டில் இவரை எந்தவித ஊடகமோ,பத்திரிகையோ,எதிர்ப்பார்க்காத அளவிற்கு திடீரென்று தமிழகத்தில்  பாராட்டுவிழா வைபவம் நடாத்தியது .

பிரத்தியோகமாக தமிழகத்துக்கு அழைத்து கௌரவித்தது இவரால் மறக்க முடியாது.
2011 ம் ஆண்டு நவம்பர் 26 ம் திகதி இவர் வாழ்வில் பொன்னாள்.
ஏனென்றால் தமிழர்களில் 1 1/2 கோடி மக்கள் கொழும்பில் சர்வதேச வானொலிக்கு பிரத்தியோகமாக உள்ளனர்

.அத்தனை போரையும் சம்பாதித்தது இவரது குரல்.மூளை முடுக்கெல்லாம் முத்தையா ஜெகன்மோகன் என்றதும் இவருக்குள் பெருமை  இல்லாமல் எதுவரும்

இராமேஸ்வரம் தொடங்கி சேலம் வரை அதாவது தமிழ் நாட்டில் தெற்கிலிருந்து வடக்குவரை எல்லா இடங்களிருந்தும் மண்டபம் நிறைய ரசிகர்கள் வந்திருந்து வாழ்த்தியதுடன் "மின்னல் வேக அறிவிப்பாளர்"என்ற பட்டமும்,"இலங்கையின் சலங்கை  ஒலி" பட்டமும் சூட்டினார்கள்.

மின்னல் வேக அறிவிப்பாளர் என்ற பெயர் இவர் அபிமானம் பெற்ற சேலம் ஆத்தூர் கண்ணன் என்பவரால் சூட்டப்பட்டது

.இலங்கையின் "சலங்கை ஒலி"என்ற பட்டம் இராமேஸ்வரம் இவர் அன்பு உள்ளம் மதினா என்பவரால் சூட்டப்பட்டது.

மின்னல் வேக அறிவிப்பாளர் என்று என் சூட்டப்பட்டது என்று திரு . ஏ கண்ணனிடம் கேட்டாள் தமிழக நேயர்களின் விலாசம் முழுவதும் வாசித்து அவர்களின் வாழ்த்தையும் வாசித்து,நீண்ட பெயர் பட்டியலையும் விரிவாக தெளிவாக வாசித்து அனைத்து உள்ளங்களிலும் நிறைந்து நிற்கும் அறிவிப்பாளர் முத்தையா ஜெகன்மோகன் என்று கூறினார்.

பல அறிவிப்பாளர்கள் வந்து போனாலும் தமிழக மூளை முடுக்கு இடங்களெல்லாம் அனைத்து பெயர்களையும் கூறுவதோடு எம் இல்லங்களுக்கு இவர் வந்து போன உணர்வை இவர் அறிவிப்பில் காண்கிறோம்.
அத்துடன் குறிப்பிட்ட நேரத்தில் பல பாடல்களோடு அனைத்து பெயர்களையும் மின்னலென வாசித்து எம்மை வியப்படைய வைப்பதால் "மின்னல் வேக அறிவிப்பாளர்"என்று பெயர் சூட்டியதாக சேலம் ஆத்தூர் ஏ.கண்ணன் விழாவில் பேசினார்

.இராமேஸ்வர நேயர்கள் சார்பில் இமேஜ் ரவி,மதினா போன்றோர் இணைந்து சூட்டினார்கள்.
விழாவில் மதினா உரையாற்றுகையில் முத்தையா அவர்கள் வானொலிக்கு வந்து நேயர் அரங்கம் எனும் நிகழ்ச்சி செய்தால் எம்மை இலங்கை வானொலியில் உள்ளே அழைத்து அமரவைத்து நிகழ்ச்சியில் விரும்பிய பாடல்களை நாம் கூறுவது போன்ற உணர்வோடு தொகுத்து வழங்குவது அருமை.

அத்தோடு நிகழ்ச்சி ஆரம்பம் தொடங்கி இறுதிவரை இருக்கும் உற்சாக ஒலி இதற்காகவே இலங்கையின் சலங்கை ஒலி என என் அடிமனதிலிருந்து வரும் பெயராக நான் சூட்டுகிறேன்
.திருநெல்வேலி மாவட்டம் லயன்ஸ் கழக கவர்னர் இவர் அபிமான மற்றுமொரு நேயரான லயன் A .P .S . ரவீந்திரன் விழாவில் உரையாற்றுகையில் இலங்கை வானொலியில் என் விருப்பம் நிகழ்ச்சி நடத்துகையில் அது எங்கள் விருப்பமாகத்தான் இருக்கும்.பள்ளிப்பருவம் தொடங்கி பருவ வயது வரை வந்த நினைவுகளை மீட்டி மனதை மறக்காத பாடல்களையெல்லாம் தருவதில் வல்லவர் முத்தையா என்று அவர் மேலும் கூறினார்.


.அந்த விழாவில் இறுதியாக உரையாற்றுகையில் இவருக்கு பேசுவதற்கு நா வரவில்லை.காரணம் ரசிகர் கூட்டம்.ஆனந்தப் பெருக்கோ,ஆனந்த அதிர்ச்சியோ,என்று தெரியவில்லை.ஒருவராக சமாளித்து அவரது உரையை ஆரம்பித்தார்
.சுமார் 11 வருடங்களாக கடமையாற்றும் அதாவது ஒரு பகுதிநேர அறிவிப்பாளராக கடமையாற்றும் இவர் வாரத்தில் ஒரு நாள் கொழும்புக்கு சர்வதேச வானொலிக்குள் நுழைந்து ஏறக்குறைய  தமிழகத்தில் அரைவாசி நேயர்களை ஈர்த்துள்ளார் என்றதும் கைதட்டல் அடங்க 5 நிமிடங்கள் சென்றது
.இந்த நிகழ்வுக்கு மற்றுமொரு பெருமை தமிழக வானொலிகளில் சில திருநெல்வேலி நாகர்கோவில்,மதுரை வானொலி அறிவிப்பாளர்கள் சிலரும் வருகை தந்ததுதான்.இவர்கள் அனைவரின் உரைகளைத் தொடர்ந்து இறுதியாகத் தான் முத்தையா ஜெகன்மோகன் அவர்களின் உரை இடம்பெற்றது
.பல சுவையான மறக்க முடியாத நிகழ்வுகளை பகிர்ந்ததொடு இவர்களைப்போன்ற அறிவிப்பாளர்களை எந்த புகழ் வாய்ந்த அறிவிப்பா
கர்கள் வளர்க்கவில்லை.இவரின் சொந்த முயற்சியில் இறைவன் தந்த இந்தக் குரலினால்  ஈர்த்தேடுத்துள்ளார் என்ற பெருமையைக் கூறுகிறார்.

இதிலிருந்து ஒன்றைக் கூறலாம் எந்த ஒரு கலைஞனின் திறமையையும் யாராலும் ஒடுக்க முடியாது.ஒரு நாள் திறமை வெளிப்பட்டே ஆகும்.
எவ்வளவோ தொலைகாட்சி,வானொலிகள் வளம் வரும் இந்த வேலை ஒரு வானொலி அறிவிப்பாளரின் திறமைக்கு இன்றும் இவ்வளவு மவுசு இருக்கின்ற தென்றல் இது பெரும் ஆச்சிரியம் என்று முத்தையா ஜெகன்மோகன் கூறினார்.

.அந்த நிகழ்வுக்கு பிறகு மூன்று இடங்களில் பாராட்டு விழா இடம் பெற்றது.கும்பகோணம்,தஞ்சாவூர்,திருச்சி போன்ற இடத்தில் இடம் பெற்றது.குறிப்பாக சென்னை வானொலி,திருநெல்வேலி வானொலியில் அறிவிப்பாளர்கள் மத்தியில் சிறப்பான மொழிவளம் என்ற அம்சத்தில் எப்படி சொற்களை பிரயோகிப்பது என்ற சிறப்பு பெட்டி நிகழ்ச்சியை நடத்தினார்.
இப்படி பல மேடைகள் கண்ட இவர் போன்ற கலைஞர்களுக்கு தொலைக்காட்ச்சிகள் குறிப்பாக தேசிய தொலைக்காட்சியில் எந்தவிதத்திலும் இந்த பாராட்டைப்பற்றியோ அல்லது இவருக்கு ஒரு பேட்டி அளிக்கும் சந்தர்ப்பமோ தரவில்லை
.இதே நேரத்தில் திருநெல்வேலி கரன் டிவி,கும்பகோணம் தொலைக்காட்சி நிலையத்தில் கூட கூப்பிட்டு  பேட்டி கண்டது இவருக்குப் பெருமை.
அதே நேரத்தில் தமிழகத்திலிருந்து பலர் வந்தாலும் அவர்களை உடனே அழைத்து அவர் பற்றி புகழ் பாடும் எம் தேசிய தொலைக்காட்சியை நிச்சயமாக பாராட்ட வேண்டும்.

கடந்த செப்டெம்பர் மாதம் 11 ம திகதி மட்டக்களப்பில் நடந்த மாபெரும் கண்காட்சியில் அதாவது அரச கைத்தொழில் நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் புனித மைக்கல் கல்லூரி மண்டபத்தில் இவருக்கு பாராட்டு வைபவம் தேசிய தொலைகாட்சி கலைஞர் திரு.ஈஸ்வர ராஜா தலைமையில் நடாத்தியது
.கல்முனையில்  கடந்த செப்டெம்பர் மாதம் 26
திகதிதடாகம்  கலை இலக்கிய வட்டம் நடாத்திய விழாவில் 
கலைமகள்ஹிதாயாரிஸ்வியின் தலைமையில் பாராட்டி ;கலைதீபம்' பட்டம்  வழங்கி  கௌரவிக்கப்பட்டார்
இந்நிகழ்ச்சியில் ஏராளமான தென்றல் அறிவிப்பாளர்கள்,நேயர்கள் சகிதம் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

.ஆரம்பகாலத்திலிருந்து இவருக்கு இந்த அளவிற்கு விட்டமின் மாத்திரை போன்று பின்னால் உந்திவிடுவது யார் என்று கேட்பீர்கள்?இவரின் அன்பான மனைவி சாந்தி தான்.இன்னும் ஏராளமான அறிவிப்பாளர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.இவரை விட ஒருபடி முன்னேற இவர் பக்க உதவியும்,ஆலோசனையும் என்றும் இருக்கும்

மேலும் மேலும்  உயர  எனது வாழ்த்துக்கள்.  நிழல்களாக  ...!!!!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக