ஞாயிறு, 11 டிசம்பர், 2011

தாமரை (05)

 

கிழக்கிலங்கையின் நிந்தவூர் மண் தமிழுக்கு வளம் பல சேர்த்த எழுத்தாளர்கள் ,அறிஞர்களை தந்துள்ளது
அந்த வரிசையில் ஒருவர் தான் இந்த இளைஞர் நிந்தவூர் ஷிப்லி....
பெயர் - நிந்தவூர் ஷிப்லி
விலாசம் :- இல 50 ஹாஜியார் வீதி, நிந்தவூர்-18
படித்தது- பி.பி. (தகவல் தொழிநுட்ப விசேட துறை,தென்கிழக்குப்பல்கலைக்கழகம்),எம்.எஸ் சி (தகவல் முகாமைத்துவம், களனிப்பல்கலைக்கழகம்).
 
பிறந்த திகதி-1985-01-31

இதுவரை நான்குகவிதை நூல்களையும் ஒரு ஆங்கில நூலையும்
எழுதி வெளியிட்டு உள்ளார்
2002ம் ஆண்டு சொட்டும் மலர்கள் என்ற நூலும் ,2006ம் ஆண்டு
விடியலின் விலாசம் என்ற நூலும் ,2008ம் ஆண்டு நிழல் தேடும் கால்கள் என்ற நூலும் ,2009ம் ஆண்டு "தற்கொலைக்குறிப்பு" என்ற நூலும் அதே ஆண்டில் "தகவல்' முகாமைத்துவம்" எனகஜற ஆங்கில நூலும் 
வெளியிட்டு உள்ளார்.. கவிதை தவிர ஆய்வு முயற்சிகளிலும்
நிறைய ஈடுபட்டு உள்ளார்."தேசிய ஒருமைப்பாட்டை இலங்கையில் நிலைநிறுத்துவதன் அவசியம் என்ற ஆய்வு இலங்கை சமாதான செயலகத்தினால் சிறந்த ஆய்வாக 2005 இல் தெரிவானது.
அத்தோடு "இணையமும் தமிழும்"இலங்கையின் இணையப்பாவனை" போன்ற ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார். பல்கலைக்கழக தமிழ்ச்சங்கத்தில் உறுப்பினராக இதழாசிரியராக மற்றும் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.. நிஷ்டை என்ற சஞ்சிகையின் ஆசிரியராகவும்
பணியாற்றியுள்ளார்..தவிர மாற்றுக்கருத்துக்கான சினிமா அமைப்பின் நிகழ்ச்சி
ஒருங்கிணைப்பாளராகவும் முஸ்லிம் மஜ்லிஸின் செயலாளராகவும் பணிபுரிந்திருக்கிறார்..மேலும் நிந்தவூர் இளம்பட்டதாரிகள் சங்க செயலாளராகவும் சிறிது காலம் தலைவராகவும் பணிபுரிந்ததோடு கிழக்கு மாகாண பசுமை அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினராகவும் கடமை
புரிந்துள்ளார்..

பத்திரிகைகளை பொறுத்தவரை இலங்கையின் தினகரன் வாரமஞ்சரியின்
கவிதைப்பூங்காவில் இதுவரை 200 இற்கும் மேற்பட்ட கவிதைகள் பிரசுரமாகியுள்ளன. இன்னும் வீரகேசரி,சுடர் ஒளி,தினமுரசு, நவமணி போன்ற பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி
வருவதோடு மல்லிகை,படிகள்,நிஷ்டை, பெருவெளி போன்ற சஞ்சிகைகளிலும்
பங்களிப்புச்செய்கிறார்..,இணையத்தளத்தை பொறுத்த வரை கீற்று, வார்ப்பு, தமிழ்மன்றம், தமிழ்
ரைற்றர்ஸ், திண்ணை போன்றவற்றிலும் நிறைய எழுதுகிறார்..

தென்னிந்திய தமிழ் ஆல்பங்களில்
பாடல்களும் எழுதியுள்ளார்.. இலக்கியப்பணிகளுக்காக தினகரன் வாரமஞ்சரியாலும் இலங்கை
நேத்ரா தொலைக்காட்சிக்காகவும் பேட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்..முதலாவது தொகுப்புக்காக
கவியரசர் வைரமுத்துவினால் நேரடியாக பாராட்டுப்பெற்றதோடு மக்கள் அரங்கம் புகழ்
விசுவினாலும் பாராட்டப்பட்டுள்ளார்..தமிழ் மன்றம் இணையத்தளம் நடாத்திய கவிதைப்போட்டிகளில்
இரண்டு முறை தங்கப்பதக்கமும் ஒரு முறை வெள்ளிப்பதக்கமும் பெற்றுள்ளார்..அத்தோடு "கவிமுத்து" என்ற பட்டமும் இவருக்கு கிடைத்து இருக்கிறது.

இலங்கை தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகள் உதவி விரிவுரையாளராக பணியாற்றிவிட்டு தற்போது இலங்கை உயர்தொழிநுட்ப நிறுவகத்தில் முகாமைத்துவ விரிவுரையாளராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார்..

கவிதையில் நல்ல இலக்கை


எட்ட வேண்டும் என்பதே இவரது ஆசை.அதற்கான ஆரம்ப முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடத்துணிந்து முயற்சிக்கிறார்.ஷிப்லியின் கலை ஆர்வம் பனித் தூறளாய் பரவிப் படர துவழா  அன்போடு வாழ்த்துகின்றேன் ..!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக