வியாழன், 4 ஏப்ரல், 2013

தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பின் மலேசியா அமைப்பாளர் -அறிமுகம்




குமாரி கே.எஸ்.செண்பகவள்ளி



மின்னஞ்சல் - ksvally@yahoo.com

கல்வி : Bachelor in Business Administration 
BBA (Hons), USA
தொழில்
சிறப்பதிகாரி, 
தகவல், தொடர்பு, பண்பாடு அமைச்சு 
(Special Officer at Ministry of Information, Communication & Culture)
பகுதி நேரத் தொழில் : எழுத்தாளர் , ஆய்வாளர்
இலக்கியப் படைப்புகள் : சிறுகதைகள், ஒரு பக்கக் கதைகள்
கவிதை (மரபு, புதுக்கவிதை, ஹைக் கூ) 
கட்டுரை (வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள்)
விருது : வாசகர் நற்பணி விருது (VNV - 2005)
: சிறந்த சேவையாளர் (2007)
: ‘டான்ஸ்ரீ ஆதி நாகப்பன் விருது’ (2012) 
(இளையத் தலைமுறை சிறந்த கட்டுரையாளர்)
பரிசுகள் : சிறுகதை, கவிதை, கட்டுரை
{ நாளிதழ், வார, மாத இதழ்கள், தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கம், கிள்ளான் வாசகர் இலக்கியச் சோலை, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், தமிழ் நேசன், மன்னன் மாத இதழ், சூரியன் மாத இதழ், மலேசியத் தேசியப் பழஞ்சுவடிக் காப்பகம், பொது இயக்கங்கள் போன்ற அமைப்புகள் வாயிலாக நடத்திய இலக்கியப் போட்டிகளில் பங்குக் கொண்டு பல பரிசுகள் பெற்றுள்ளார் . }


அண்மையக் காலப் பதிவுகள்:-
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொல்கத்தா தமிழ்ச் சங்கத்தில் “மலேசியத் தேசியப் பழஞ்சுவடிக் காப்பகம் ஒரு வரலாற்றுக் களஞ்சியம்” என்ற தலைப்பில் கட்டுரை சமர்ப்பித்துள்ளார் 
மலேசியத் தொலைக்காட்சியில் “வசந்தம்” என்னும் நிகழ்ச்சியில் மலேசிய வானொலி மின்னல் பண்பலையில் ஒரு மணி நேர நேர்க்காணல்..
கடந்த 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லண்டன் தமிழ் வானொலியில் ஒரு மணி நேர நேர்க்காணல்
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் “ மலேசிய இலக்கியத்தில் பெண் படைப்பாளர்களின் வளர்ச்சி – ஒரு பார்வை” என்ற தலைப்பிலும் கட்டுரைச் சமர்ப்பித்துள்ளார் 
கடந்த 14-15 பிப்ரவரி 2013இல் சென்னையில் நடைபெற்ற உலக தமிழாராய்ச்சி மாநாட்டின் தேசியக் கருத்தரங்கில் “அயல்நாட்டுத் தமிழ் இலக்கியங்கள்” என்ற தலைப்பில் நடைபெற்ற அமர்வில் முனைவர் பா.த கிங்ஸ்டன் எனது கவிதைகளை ஆய்வுச் செய்து “புலம்பெயர் இலக்கியங்கள் பார்வையில் மலேசியக் கவிஞர் கே.எஸ்.செண்பகவள்ளி” என்ற தலைப்பினில் கட்டுரை சமர்ப்பித்துள்ளார்.
பொதுச்சேவை
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (துணைச் செயலாளர்) 
சுங்கை சிப்புட் இந்தியர் இயக்கம் (துணைச் செயலாளர் 
சுங்கை சிப்புட் வாசகர் இயக்கம் (தலைவி) 
மேனாள் புத்ரி ம.இ.கா பேராக் மாநிலம் (துணைத்தலைவி) {அரசியல் கட்சி} 
புத்ரி ம.இ.கா சுங்கை சிப்புட் தொகுதி {அரசியல் கட்சி} 
போன்ற அரசியல், சமூகம், இலக்கியம் ஆகிய அமைப்புகளில் பங்காற்றி வருகின்றார் 
எழுத்துறை பிரவேசம்


எழுத்துத் துறையில் 25 வருட அனுபவங்கள். 1986ஆம் ஆண்டு முதலாக எழுதி வருகிறேன். முதல் படைப்பு 13வது வயதில் (மரம்) தமிழ்நேசன் நாளிதழுக்கு எழுதிய கவிதையாகும். 1990ஆம் ஆண்டு முதல் சிறுகதை (தமிழ்நேசன் 70ம் ஆண்டு மலர்), 2004ஆம் ஆண்டு முதலாவது ஆய்வுக்கட்டுரை (அரசியல் பயணத்தில் டத்தோஸ்ரீ சாமிவேலு)
தற்சமயம் ஈடுபட்டிருக்கும் இலக்கியத் பணிகள்:
மக்கள் ஓசை, தமிழ்நேசன், மலேசிய நண்பன், அன்பு இதயம், தமிழ் ஓவியம் போன்ற நாளிதழ், வார மாத இதழ்களில் சிறுகதை, கவிதை, கட்டுரைகளைஎழுதி வருகின்றார் 
“மலேசியத் தமிழ் எழுத்துலகம்”, “தங்கமீன்”, “திண்ணை”, ஆகிய இணையத்தளங்களிலும் படைப்புகளை எழுதியுள்ளார் 
நாட்டின் தேசத்தலைவர்கள், முக்கியமான நாட்களைக் குறித்து இதுவரை 60 ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார் 


கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -இலங்கை 
அமைப்பாளர் 
தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக