வியாழன், 9 மே, 2013

தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பின் - அறிமுகம்


கவிஞர் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.



இலங்கை,யாழ்ப்பாணம் கோப்பாய் நாவலர் பாடசாலை முன்னாள் ஆரம்பகர்த்தாவும் தலைமையாளரும், யாழ் அரச குடும்ப இரண்டாவது பரராஐசேகரன் (எதிர்மன்னசிங்கன்) வம்சாவழி வந்த முருகேசு சுவாமிநாதர் -சிவகாமிப்பிள்ளையின் இரண்டாவது மகன் நகுலேஸ்வரர் அவர்களின் மகள் வேதா

புத்தூர் மாளிகைப் பொன்னம்பலம்-தெய்வானைப் பிள்ளை தாயார்

நர்சரி ஆசிரியையாக கோப்பாயில் ஓரு வருடம் வேலை செய்கையில் . திருணமாகி ஹொரண நகரத்தில் ஒரு கிறீஸ்தவ பாடசாலையில் பிரதி ஆசிரியராகச் சிறிது காலம் பணியாற்றிய பின் . டென்மார்க்கிலும் சிலகாலம் பிரதி ஆசிரியராகத் தமிழ் பாடசாலையில் கடமை புரிந்துள்ளார்

1976ல் இலங்கை வானெலியில் ‘பூவும் பொட்டும்’ மங்கையர் மஞ்சரிக்கு எழுதியதில் இருந்து இவரது எழுத்துச் பயணம் ஆரம்பம்.



பாடசாலையின்பலபோட்டிகளிலும்படிக்கும் காலத்திலிருந்து பங்கு பற்றிப் பரிசு பெற்றுள்ளார்

திருமணமாகிக் கணவரின் ஊக்குவிப்பில் டென்மார்க், யேர்மனி, இலண்டன் ஆகிய இடங்களில் இருந்து வெளி வந்தசஞ்சிகைகள் சிலவற்றிலும் எழுதியுள்ளார்

வானொலி, தொலைக்காட்சிகளில் விமர்சனம், கவிதை, அனுபவக் கட்டுரைகள் எழுதி வாசித்துள்ளார் வாசித்தும் வருகின் றார்

ரி.ஆர்.ரி தமிழ் அலை ஐரோப்பிய வலத்தில் இரண்டேகால் வருடங்கள் டென்மார்க் செய்திகளும், இலண்டன் தமிழ் வானொலியில் தகவல் சாலயில் இரண்டு வருடங்கள் டென்மார்க் செய்திகளும் வாசித்துள்ளார்


2002ல் ‘வேதாவின் கவிதைகள்’ நூலும்

2004ல் ‘குழந்தைகள் இளையோர் சிறக்க’ என்ற தலைப்பில் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் கொண்ட நூலும்,

2007ல் ‘உணர்வுப் பூக்கள் எனும் கவிதை நூலை வேதாவும் அவரது கணவருமாக இணைந்து வெளியிட்டார்கள்

http://www.noolaham.org/wiki/index.php?title=முதற்_பக்கம்

இங்கு இவை மின்னூல்களாக உள்ளன.

இசை, நடனம் கலைகளை மிகுந்த ஈடுபாட்டுடன் ரசிப்பதுண்டு. மேடைகளில் கவிதைகள் வாசிப்பதுண்டு. தமிழெனும் வேர் காக்கும் விதைப்பு இது. டேனிஸ் மொழியில் குழந்தைகள் பராமரிப்பு (நர்சரி) பற்றிய கல்வியை மூன்று வருடங்கள் படித்து ‘பெட்டகோ’ எனும் தகுதியை 1993ல் பெற்று 3லிருந்து 12 வயது டெனிஸ், தமிழ்ப் பிள்ளைகளுடன் சுமார் பதினைந்து வருடங்கள் வேலை செய்துள்ளார்

இன்று பதிவுகள்.கொம், வார்ப்பு.கொம் , முத்துக்கமலம்.கொம், தமிழ்ஆத்தேர்ஸ்.கொம் இன்னும் சிலவற்றில் (அலைகள்.கொம், தமிழ்விசை.கொம்) அவ்வப்போது எழுதிக் கொண்டு உள்ளார்

செந்தமிழ் நூலெடுத்துக் கவி மாலிகை, பாமாலிகையென பாக்களால் மாலை, சிந்தனை மொழி, கட்டுரை, கதை என்று பல வகைகளாகப் புனையும் இணையச் சாலையில் இவரது இடுகைகளை வாசியுங்கள். வாசிப்பதோடு நின்றுவிடாது உங்கள் கருத்துக்களையும் இங்கு பதிவு செய்யுங்கள். உங்கள் ஒவ்வோரு சொல்லும் வேதாவை மேலும் மேலும் எழுத ஊக்குவிக்கும்

கூகிள் தேடலில் – வேதா இலங்காதிலகம் - (தமிழில்) (In english Vetha Elangathilakam) எழுதி அழுத்துங்கள் மேலும் விவரங்கள் பெறுவீர்கள்.

http://ta.wikipedia.org/wiki/வேதா_இலங்காதிலகம்

இவரைப்பற்றி கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவில் உள்ளதையும் பார்க்கமுடியும்

இது அலைகள்.கொம் இணையத்தளத்தில் வேதாவுடனான பேட்டி.http://www.alaikal.com/news/?p=38761#more-38761


நன்றி.

அன்புடன் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

அமைப்பாளர்
தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக